முக்கிய செய்திகள்

கனடிய மோசடித் தடுப்பு மையத்தின் விசேட வேண்டுகோள்

233

இணையவழியில் அல்லது அங்கீகரிக்கப்படாத மூலங்களில் இருந்து கொரானா தடுப்பூசிகளை வாங்குவதைத் தவிர்க்குமாறு கனடாவின், மோசடி தடுப்பு மையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மக்கள் தடுப்பூசி பெற எதிர்பார்க்கின்றனர். அவர்கள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப விரும்புகிறார்கள். இதனைப் பயன்படுத்தி,  மோசடியாளர்கள் அவர்களின் உணர்ச்சியுடன் விளையாடுகின்றனர்  என்று கனடாவின், மோசடி தடுப்பு மையத்தின் புலனாய்வு அதிகாரியான, Jeff Thomson தெரிவித்துள்ளார்.

இந்த நோய்க்கு சிகிச்சையளிக்க அல்லது நோயைத் தடுக்க தனியார் நிறுவனங்களிடமிருந்து போலியான தடுப்பூசிகளை வாங்குவது, ஆபத்துகளை ஏற்படுத்தும் என்று, மோசடி தடுப்பு மையம் கனடியர்களுக்கு அறிவித்துள்ளது.

போலியான இணைய வலையமைப்புகள் மூலம், அங்கீகரிக்கப்படாத தடுப்பு மருந்துகளை வாங்கி, உடலில் ஏற்றிக் கொண்டால்,தீவிரமான  சுகாதார ஆபத்துக்களை எதிர்கொள்ள நேரிடும் என்று, மோசடி தடுப்பு மையத்தின் புலனாய்வு அதிகாரி Jeff Thomson எச்சரித்துள்ளார்.

மோசடியாளர்கள் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் போன்வற்றின் மூலமும், செயலிகள் மூலமும், மக்களை அணுகுவதற்க மலினத்தனமான முறையில் அணுகுகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே இந்த விடயத்தில் கனேடியர்கள் மிகவும்  அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *