கனடிய விண்வெளி நிறுவனமும் நாசாவும் சந்திரனுக்கான அடுத்த பயணங்களில் கனடா பங்கேற்பதை உறுதிப்படுத்தும் வகையில் உடன்படிக்கையொன்iறில் கைச்சாத்திட்டுள்ளன.
அந்த உடன்படிக்கையின் பிரகாரம் 2023ஆம் ஆண்டில் கனேடிய விண்வெளி வீரரொருவர் பூமியின் செயற்கைக்கோளைச் சுற்றி வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நுழைவாயில் உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, 2023ஆம் ஆண்டில் தொடங்கப்படவுள்ள ஆர்ட்டெமிஸ் II பணியில் கனடாவும் மிக முக்கிய பங்காளராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கனடாவின் வீரர் திட்டமிட்டபடி விண்வெளிக்குச் செல்லும் பட்சத்தில் 1972ஆம் ஆண்டுக்குப் பிறகு சந்திரனுக்குச் செல்லும் வீரர் என்ற வரலாற்றுப் பதிவை செய்யவுள்ளமை முக்கிய அம்சமாகும்.