முக்கிய செய்திகள்

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தின் நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு 100 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது

406

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தின் நிவாரணப் பணிகளுக்காக இந்திய மத்திய அரசு 100 கோடி ரூபாய் நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்துவரும் பருவமழையின் தாக்கத்தால் நிலச்சரிவு மற்றும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், இவற்றின் பாதிப்பால் 35 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50,000 பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

அத்துடன் ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று உலங்குவானூர்தி சென்று பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து மழை, வெள்ளத்தால் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ள கேரளாவுக்கு உடனடியாக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்துள்ளதுடன், பின்னர் மத்திய குழு பார்வையிட்டு தேவையான நிதி உதவிகளை மத்திய அரசு வழங்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *