முக்கிய செய்திகள்

கருங்கடல் மாளிகை; புட்டீனுக்கு செக்வைத்தார் ராட்டன்பெர்க்

88

கருங்கடல் கரையோரத்தில் அமைந்துள்ள 1.5 பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள அரண்மனை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்குச் சொந்தமில்லை என்று பெரும் செல்வந்தரான அர்காடி ராட்டன்பெர்க் (Arcady Rottenberg) கூறியுள்ளார்.

கிரெம்ளின் (Kremlin) விமர்சகர் அலெக்ஸி நேவல்னி (Alexei Navalny) எழுதிய அரண்மனை பற்றிய அறிக்கையில், இந்த அரண்மனை புடினுக்குச் சொந்தமானது என அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா முழுவதும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை தீவிரமடைந்து வரும் நிலையில் அவரது இந்த கருத்து வெளியாகியுள்ளது.

அதேநேரம் இந்த அரண்மனை கட்டுமானப்பணிகளில் ஊழல்கள் நிகழ்ந்துள்ளதாக தற்போது கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருக்கும் அலெக்ஷி நவால்னி (Alexei Navalny) தெரிவித் து வந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *