முக்கிய செய்திகள்

கர்நாடகாவில் பாரஊர்தி வெடித்து சிதறியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

30

கர்நாடகாவில் வெடிபொருட்களுடன் சென்ற பாரஊர்தி ஒன்று வெடித்து சிதறியதில் 8 பேர்  உயிரிழந்துள்ளனர்.

தொடருந்து பாதைக்குத் தேவையான கற்களை உடைக்கும் இடத்துக்கு, ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டைனமைட் வெடிபொருட்களை ஏற்றிக் கொண்டு சென்ற பாரஊர்தியே வெடித்துச் சிதறியதாக கூறப்படுகிறது.

நேற்றிரவு  10:20 மணியளவில் இடம்பெற்ற இந்த பாரிய வெடிவிபத்தில்,  பாரஊர்தி சாரதி, மற்றும்  அதில் பயணம் செய்த தொழிலாளர்கள் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என சிவமோகா மாவட்ட ஆட்சியர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்கள் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என கூறப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *