கலப்பு நீதிமன்றம் குறித்த யோசனை வரவேற்கப்பட வேண்டியது

977

கலப்பு நீதிமன்றம் குறித்த நல்லிணக்கப் பொறிமுறை குறித்த செயலணியின் யோசனை வரவேற்கப்பட வேண்டியது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சஹிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கப்பொறிமுறைமை குறித்த சிறப்புச் செயலணி வெளியிட்டு வைத்துள்ள தமது யோசனைகள் அடங்கிய அறிக்கையில் கலப்பு நீதிமன்றம் குறித்த யோசனையும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீதவான்களை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றப் பொறிமுறையின் அடிப்படையில் நீதி விசாரணைப் பொறிமுறைமை அமைய வேண்டுமெனவும், நீதவான் குழாமில் ஒருவரேனும் வெளிநாட்டு நீதவானாக இருக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரை அடங்கிய ஆவணம் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் கூறப்பட்டுள்ளவாறு விசாரணைப் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்றும், அதனை இலங்கை இரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று கருத்துரைத்திருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே இலங்கை நீதி விசாரணைப் பொறிமுறையில் கலப்பு நீதிமன்ற அமைப்பு அவசியமானது என்பதே தமது திடமான நிலைப்பாடு என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையளார் அல் ஹூசெய்ன் இன்று தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *