கலிடோன் பிரதேசத்தில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெடுஞ்சாலை 10இற்கும், நெடுஞ்சாலை 9இற்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார் என்றும், மோசமாக காயமடைந்த மற்றொருவர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்றும், பீல் மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான ஒன்ராறியோ காவல்துறை வெளியிட்டுள்ள படம் ஒன்றில் வாகனம் ஒன்று வீதியில் சிதறிக் கிடக்கும் காட்சி பதிவாகியுள்ளது.