முக்கிய செய்திகள்

கலிபோனியாவின் காட்டுத் தீயில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்

498

கலிபோனியாவின் வட பிராந்தியத்தில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி 2 சிறுவர்கள் மற்றும், அவர்களின் பூட்டி உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரண்டு தீயணைப்பு படை வீரர்களும் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 17 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுளளது.

அதேவேளை ஆயிரக்கணக்காணவர்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறியுள்ள நிலையில், ரெட்டிங் நகரத்தில் இருந்து மட்டும் 40,000 மக்கள் வெளியேறியுள்ளனர்.

ஷாஸ்டா எனும் பகுதியில் காற்று வேகமாக வீசுவதால், நெருப்பு சுழற்காற்று உருவாகி மரங்களை வேரோடு சாய்ப்பதாகவும், கார்கள் அடித்து செல்லப்படுவதாகவும் தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த தீயால் குறைந்தது 500 கட்டுமானங்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும், ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு இது அச்சுறுத்தலாக விளங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த திங்கள்கிழமை தொடங்கிய இந்த காட்டுத்தீ 48 ஆயிரம் ஏக்கர் நில்ப்பரப்பில் பரவியுள்ளதாகவும், இந்த தீயை அணைக்க ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாகவும் அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *