கல்கரியின் தென்மேற்கு பகுதியில் இடம்பெற்ற வானூர்தி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்

399

கல்கரியின் தென்மேற்கே உள்ள மலைசார் பிராந்தியத்தில் நேற்று இடம்பெற்ற வானூர்தி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக கனேடிய மத்திய காவல்துறையினர் தெரிவித்து்ளளனர்.

இரண்டு இயநதிரங்களைக் கொண்ட அந்த சிறியரக வானூர்தி, நேற்று பிற்பகல் 1.30 அளவில் வீழந்த விபத்துக்குள்ளானதாகவும், அதனை நேரில் பார்த்தோர் தம்மிடம் தெரிவித்ததாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த அந்த வானூர்தியில் இருவர் மட்டுமே இருந்ததாகவும், இருவரும் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், அவர்களது பெயர் வயது உள்ளிட்ட விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

அந்த விமானம் கல்கரியில் இருந்தே புறப்பட்டுச் சென்றதாகவும், தாம் அறிந்த வரையில் அந்த விமானத்தில் இருந்தோர் நில வரைபட பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது குறித்த அந்த விமானம் அந்த பகுதியில் இருந்த மலை முகடு ஒன்றுடன் மோதுண்டு, அங்கிருந்து கீழ்நோக்கி உருண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *