முக்கிய செய்திகள்

கவலை கொள்ளத்தக்க செயற்பாடுகளின் அறிகுறிகள் சிறிலங்காவில்

141

சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான கவலை கொள்ளத்தக்க செயற்பாடுகளின் அறிகுறிகள் சிறிலங்காவில் தென்படுவதாக சிறிலங்காவுக்கான பின்லாந்து தூதுவர் ஹரி கமரெய்னென் (Harry Kamarainen) தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா, பாகிஸ்தான், பூட்டான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான பின்லாந்து நாட்டின் தூதுவர் ஹரி கமரெய்னென் (Harry Kamarainen) அவரது கீச்சகப் பக்கத்திலேயே இவ்வாறு பதிவிட்டுள்ளார்

அதன்படி சிறிலங்காவில் வசிக்கும் மிகக்குறுகிய பின்லாந்து தமிழ்ச்சமூகத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கும் அவர், சிறிலங்காவில் சிறுபான்மை தமிழ்ச்சமூகத்தின் நிலை தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.

அத்துடன்  துரதிஷ்டவசமாக சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான கவலைகொள்ளத்தக்க செயற்பாடுகளின் அறிகுறிகள் இலங்கையில் தென்படுகின்றன’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *