காங்கிரசுக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அழைப்பு

54

தி.மு.க. – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்துவரும் நிலையில், காங்கிரசுக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அழைப்பு விடுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியானது மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு வந்தால், அவர்களுக்கு அது நல்லதென மய்யத்தின் பொதுச்செயலாளர் குமரவேல் கூறியுள்ளார்.

அத்துடன், காங்கிரஸ் கட்சி எங்கள் தலைமையிலான மூன்றாவது கூட்டணிக்கு வந்தால் போதுமான தொகுதிகள் ஒதுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. – காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முன்னேற்றமும் இதுவரை ஏற்படவில்லை. காங்கிரஸ் கேட்ட தொகுதிகளை விட மிகக் குறைவான தொகுதிகளைக் கொடுக்க தி.மு.க. முன்வந்ததால் காங்கிரஸ் நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இதையடுத்து, காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டி நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்கப்பட்டது. அப்போது, 30 தொகுதிகள் வரை வழங்கினால் தி.மு.க.வுடன் கூட்டணியைத் தொடரலாம் என சிலர் கூறியுள்ளனர்.

சிலர் தனித்துப் போட்டியிடலாம் என்றும் சிலர் கமலின் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் எனவும் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தி.மு.க. குறைவான தொகுதிகளைக் கொடுப்பதில் பிடிவாதமாக இருந்து, காங்கிரஸ் வெளியேறும் சூழ்நிலை வந்தால் மூன்றாவது அணி இந்தத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *