முக்கிய செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்ட தாய்மார்களால் மின் அஞ்சல்

343

காணாமல் ஆக்கப்பட்ட தாய்மார்களால், மார்ச் மாதத்தில் முக்கியமான பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக சக்திவாய்ந்த நாடுகளையும் ஐ.நா.வையும் வலியுறுத்தகோரி மின் அஞ்சலொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வவுனியாவில் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுவருடதினமான இன்று  வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

எமது போராட்டம் இன்றுடன் 1414 நாட்களை எட்டுகின்றது. முக்கியமாக இந்த ஆண்டு மார்ச் மாதம்,  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஒரு முக்கியமான முடிவை எடுக்க உள்ளது.

அவர்களின் புதிய தீர்மானத்தில் சேர்ப்பதற்காக நாம் முன்வைத்துள்ள யோசனையை அனைத்துநாடுகளும் கவனத்தில் எடுக்கவேண்டும்.

காணாமல்ஆக்கப்பட்ட தமிழ் தாய்மார்கள் சார்பாக சக்திவாய்ந்த நாடுகளுக்கு நாங்கள் எழுதியவற்றின் சுருக்கமான தோற்றத்தை இங்கே தெரிவுபடுத்த விரும்புகிறோம்.

பின்வரும் விடயங்களை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அமுல்ப்படுத்த கேட்டுக்கொள்கிறோம்.

மார்ச் 2021 தீர்மானத்தில் பின்வரும் விடயங்கள் சேர்க்கப்படவேண்டும் என நாம் பரிந்துரைக்கின்றோம்.

சிறிலங்காவின் போர்க்குற்றங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லுங்கள் அல்லது செர்பிய போர்க்குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டதைப் போன்ற ஒரு தீர்ப்பாயத்தை நிறுவுங்கள்.

சிறிலங்காவின் வட.கிழக்கில் தங்கள் பண்டைய தமிழ் தாயகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு அரசியல் தீர்வைத் தீர்மானிக்க ஐ.நா. நிர்வாகத்தின் கீழ் வாக்கெடுப்பை நடத்துங்கள்.

ஐ.நா. முன்பு 2011இல் தெற்கு சூடான் மற்றும் 1999 ல் கிழக்கு திமோர் போன்ற பல நாடுகளில் செய்ததைப் போல சிரியா மற்றும் மியான்மரில் ஐ.நா தற்போது விசாரணை நடத்தி வருவதால், சிறிலங்காவில் நடந்த இனப்படுகொலை குறித்தும் ஐ.நா விசாரணை வேண்டும் என்று மேலும் குறிப்பிட்டனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *