முக்கிய செய்திகள்

காணாமல் போனவர்களின் உறவினர்கள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலருக்கு கடிதம்

122

மனித உரிமைபேரவையில் எமது ஆலோசனைகளையும் ஆதரிக்கும்படி தெரிவித்து வவுனியாவில் கடந்த 1445 ஆவது நாளாக தொடர்போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அந்தோனி பிளிங்கினுக்கு (Anthony Blingin) கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தனர்.

அதில் சிறிலங்காவின் போர்க்குற்றம், தமிழ் இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கான சர்வதேச குற்றவியல் விசாரணைகளுக்கு  சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது விசேட தீர்ப்பாயத்தின் தேவை என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிங்களவர்களின் எதிர்கால ஆக்கிரமிப்பு, தாக்குதலில் இருந்து தமிழர்களைப் பாதுகாக்க, எங்களுக்கு  அரசியல் தீர்வை நிர்ணயிப்பதற்கான வாக்கெடுப்பின் அவசியம் தொடர்பிலும், அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் சிரியா  அல்லது மியான்மர் பாணியிலான  விசாரணைபொறி முறைகளை வலியுறுத்தியுள்ளதோடு, தாயகத்தில் கொடூரமான இராணுவத்தை அகற்ற  ஐ.நா அமைதிகாக்கும் படையை அனுப்புதல் இவை நிறைவடையும் வரை வரை ஓய்வெடுக்கக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம் என்பது அக்கடிதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *