முக்கிய செய்திகள்

காணி அளவிடும் முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது

63

திருகோணமலை 64 ஆம் கட்டை பகுதியில் விகாரைக்கென, 300 ஏக்கர் காணிகளை அபகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட காணி அளவிடும் முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.

மூதூர், 64ஆம் கட்டை பகுதியில் உள்ள குன்றின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள குட்டியாராம விகாரையைச் சுற்றியுள்ள, பொதுமக்களின் 300 ஏக்கர் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

குட்டியாராம விகாரையை சுற்றியுள்ள குன்றுப் பகுதியை அளவீடு செய்ய அனுமதித்த அப்பகுதி மக்கள், தமது குடியிருப்பு பகுதிகளை அளவீடு செய்ய முயன்ற போது, அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து, அளவீடு செய்வதற்குச் சென்றிருந்த, நில அளவையாளர்கள் திரும்பிச் சென்ற பின்னர், சம்பவ இடத்துக்குச் சென்ற சிறிலங்கா காவல்துறையினர், விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *