காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆவணங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், மனோகணேசன், மஸ்தான் ஆகியோர் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆவணங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியே கொண்டுசெல்லப்படுகின்றமையை, அரசாங்கம் தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதன் ஒரு கட்டமாகவே தாங்கள் பார்க்கின்றோம்.
ஆவணங்களை அனுராதபுரத்தில் வைத்துவிட்டு, தமிழ் மக்கள் தங்களின் தாயகம் என்று கூறும் நிலத்தை என்னவிதமாக அபகரிக்கலாம் என்ற திட்டங்களை வகுப்பதற்காகத்தான் குறித்த ஆவணங்கள் இரவோடிரவாக மாற்றப்பட்டுள்ளது” என்று சுமந்திரன் தெரிவித்தார்.
இதேவேளை வடக்கில் உள்ள நான்கு மாவட்டங்களின் காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பாக காணியமைச்சர் சந்திரசேன பதிலளிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
காணி ஆவணங்களை கையாளும் அலுவலகம் வடக்கில் இருப்பதே எனது விருப்பம். அதனை உரிய அமைச்சரிடம் வலியுறுத்தியிருக்கிறேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.