முக்கிய செய்திகள்

காபன் வாயுக்களை வளிமண்டலத்தில் வெளியிடாமல் தடுக்கும் தொழில்நுட்பத்திற்கு பரிசு?

39

காபன் வாயுக்களை வளிமண்டலத்தில் வெளியிடாமல் கைப்பற்றி நீக்கும் சிறந்த தொழில்நுட்பத்தை பரிந்துரைப்பவர்களுக்கு 100 மில்லியன் டொலர் பரிசு வழங்குவதாக உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரரான எலோன் மஸ்க்  (elon musk)  அறிவித்துள்ளார்.

தற்போது உலகம் முழுவதும், வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் பெரும் கவலைக்குரிய பிரச்சினையாகியுள்ளது.

இதற்கு, தொடர்ச்சியாக அதிக காபன் வாயுக்களை வளிமண்டலத்தில் வெளியேற்றுவதே முக்கிய காரணமாக உள்ளது.

இந்தநிலையில் மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யும் உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான எலோன் மஸ்க்  (elon musk)  , காபன் வாயுக்களை கைப்பற்றி நீக்கும் தொழில்நுட்பம் பற்றி விவாதத்தை தொடங்கி வைத்துள்ளார்.

காபனை கைப்பற்றும் சிறந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துபவர்களுக்கு பரிசளிப்பதற்காக 100 மில்லியன் டொலர்கள் நன்கொடை அளிப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

விரிவான தகவல்களை அடுத்த வாரம் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *