முக்கிய செய்திகள்

காபூல் துணை ஆளுநர் மீது கார்க்குண்டு தாக்குதல்

21

ஆப்கானிஸ்தானில் காபூல் துணை ஆளுநர் மஹபூபுல்லா மொஹேபி (Mahboobullah Mohebi) கார்க்குண்டு தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

காபூலின் துணை ஆளுநர் மஹபூபுல்லா மொஹேபியின்  (Mahboobullah Mohebi) காரில் மறைத்து வைத்திருந்த குண்டை, இன்று காலை பயங்கரவாதிகள் தொலைவுக் கட்டுப்பாட்டு முறையில், வெடிக்கச் செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் மஹபூபுல்லா மொஹேபி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் அவரது பாதுகாவலர் ஒருவரும் உயிரிழந்தார். மேலும் 2 பாதுகாவலர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *