முக்கிய செய்திகள்

காவல்துறையின் குரூசர் வாகனத்தின் மீது மோதிய நபர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு

45

ஸ்காபரோவில் (Scarborough) தனது வாகனத்தினால், வேண்டுமென்றே காவல்துறையின் குரூசர் வாகனத்தின் மீது மோதிய நபர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள நபர் 47 வயதுடையவர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மார்க்கம் வீதியில் நேற்றுக் காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இந்தச் சம்பவத்தில் காவல்துறை வாகனத்தில் இருந்த அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, காவல்துறை வாகனம் மீது மோதிய நபரும் காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *