ரொறன்ரோவில் முடக்க நிலை நடைமுறையில் உள்ள நடத்தப்பட்ட போராட்டங்களின் போது காவல்துறை அதிகாரி ஒருவரை கடித்தவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சனிக்கிழமை பிற்பகல் குயீன்ஸ் பார்க்கில் இருந்து நகரின் பிரதான வீதிகள் வழியே சுமார் 5 ஆயிரம் பேர் முடக்க நிலைக்கு எதிராக பேரணியாகச் சென்றனர்.
இதன்போது மிசிசாகாவைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவர் இரண்டு காவல்துறையினரை தாக்கியதுடன் ஒருவரை, கடித்து காயப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து, அவரைக் கைது செய்துள்ள காவல்துறையினர் இரண்டு குற்றச்சாட்டுகளை இவர் மீது முன்வைத்துள்ளனர்.