கியூபெக்கில் இன்று தேர்தல் பரப்புரைகள் உத்தியோகபூர்வமாக தொடங்குகின்றன

535

கியூபெக்கில் மாநில சட்டமன்றுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த மாநில கட்சிகள் தேர்தலை எதிர்நோக்கும் வகையிலான தமது பரப்புரை நடவடிக்கைகளை இன்று உத்தியோகபூர்வமாக தொடங்கவுள்ளனர்.

கியூபெக் சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் நாள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பரப்புரைப் பேரூந்துகள் இன்றிலிருந்து பரப்புரை முடிவுறும் வரையில், மாநிலத்தின் அனைத்து பாகங்களுக்கும் தமது பயத்தை ஆரம்பிக்கவுள்ளன.

இதேவேளை இன்று மாநில ஆளுநரைச் சந்திக்கவுள்ள கியூபெக் லிபரல் கட்சித் தலைவர் ஃபிலிப் கோலியார்ட்(Philippe Couillard), அதற்கு முன்னதாக தனது அமைச்சரவை உறுப்பினர்ளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்புக்களின் போது, கியூபெக் மாநில ச்டடசபை கலைக்கப்படுகின்றமை மற்றும் தேர்தல் பரப்புரை ஆரம்பிக்கப்படுகின்றமை ஆகிய ஆவணங்களில் அவர் கையெழுத்திடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக 2014ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளுட்ன் வெற்றி பெற்று முதல்வரான ஃபிலிப் கோலியார்ட்(Philippe Couillard), இம்முறை இரண்டாவது தடவையாகவும் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்த்ககது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *