முக்கிய செய்திகள்

கியூப மக்களை வழிநடாத்திய பிடல் காஸ்ட்ரோ பழம்பெரும் புரட்சியாளர் மட்டுமின்றி சிறந்த சொற்பொழிவாளர்!

1350

கீயுபாவை நீண்ட காலமாக ஆட்சிசெய்து வந்த அதன் தலைவர் பிடல் காஸ்ட்ரோ மறைந்த செய்தி அறிந்து தாம் மிகவும் கவலை கொண்டுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.

முன்னாள் கீயூப நாட்டு அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் மறைவினை அடுத்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

பிடல் காஸ்ட்ரோ ஒரு வாழ்நாள் தலைவர் என்பதையும் தாண்டி அதற்கும் மேலானவர் எனவும், சுமார் அரை நூற்றாண்டுகளாக தனது மக்களை வழிநடாத்திய அவர், பழம்பெரும் புரட்சியாளர் மட்டுமின்றி சிறந்த சொற்பொழிவாளர் எனவும் பிரதமர் ஜஸ்டின் ரூடோ அவருக்கு புகளாரம் சூட்டியுள்ளார்.

கீயூப நாட்டின் கல்வித்துறை மற்றும் சுகாதார பராமரிப்பு துறைகளில் குறிப்பிடத்தக்க பாரிய முன்னேற்ங்களை பிடல் காஸ்ட்ரோ ஏற்படுத்தியுள்ளததையும் பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார்.

அவர் ஒரு சர்ச்சைக்குரிய மனிதான இருந்துவந்த போதிலும், கீயூப மக்களை ஆழமாக நேசிப்பவர் என்பதையும், அவரது பாரிய அர்ப்பணிப்புகளையும் அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி அவரை விமர்சிப்பவர்கள் கூட ஏற்றுக்கொள்வதாகவும் பிரதமர் ஜஸடின் ரூடோ குறிப்பிட்டுள்ளார்.

பிடல் காஸ்ட்ரோவை தனது நண்பர் என்று கூறிக்கொள்வதில் தமது தந்தை பெருமை கொண்டிருந்ததாகவும், தனது தந்தையின் மரணச் சடங்கின் போது அவரை சந்திக்க கிடைத்த சந்தர்ப்பத்தை தாம் பெருமையுடன் நினைவுகூர்வதாகவும், அண்மைய கியூப பயணத்தின் போது அவரது மூன்று மகன்களையும், சகோதரரான தற்போதய கியூப அதிபரையும் சந்தித்ததாகவும் பிரதம்ர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் அனைத்து கனேடியர்கள் சார்பாகவும் மறைந்த தலைவர் பிடல் காஸ்ட்ரோவின் குடும்பத்தாருக்கும், நன்பர்களுக்கும், மிகப்பெருமளவிலான அவரின் ஆதரவாளர்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிபதாகவும் பிரதமர் ஜஸடின் ரூடோ தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்று தமது தலைவரின் இழப்பினால் துயருறும் அனைத்து கியூப மக்களுடன் கனேடியர்களாகிய நாமும் இணைந்து கொள்வதாகவும் பிரதமர் ஜஸடின் ரூடோ மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *