கிரேக்க நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஐ எட்டிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது

384

கிரேக்க நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஐ எட்டிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அனர்த்தம் இடம்பெற்ற பகுதியின் மத்தியாக உள்ள கடற்கரை ஓரக் கிரமமம் ஒன்றில் 26 பேரின் சடலங்கள் காணப்பட்டதாக அந்தப் பகுதி நகரபிதா தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த அனர்த்தத்தில் மொத்தமாக 49 பேர் உயிரிழந்ததாகவும், அவர்களில் பலர் சிறுவர்கள் என்றும் தீயணைப்புப் படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதிகாரிகளிடம் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பான பல முறைப்பாடுகள் செய்யபபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மக்களின் மீட்பு நடவடிக்கைகளுக்காக படகுகளும், உலங்குவானூர்திகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து வருகிறோம் என்று கிரேக்க பிரதமர் அலெக்ஸிஸ் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *