கிழக்கில் பல பகுதிகள் காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டன

175

கிழக்கு மாகாணத்தில், பல பிரதேசங்கள் இன்று காலை 6 மணியில் இருந்து, தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டின்ன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளதை அடுத்தே அம்பாறை மாவட்டத்திலுள்ள சில பகுதிகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அக்கரைப்பற்று காவல்துறைப் பிரிவில், அக்கரைப்பற்று 5ஆம், 14ஆம், வட்டாரங்களும், அக்கரைப்பற்று மாநகரப் பிரிவிலும், அட்டாளைச்சேனை காவல்துறைப் பிரிவில், பாலமுனை, ஒலுவில், அட்டாளைச்சேனை ஆகிய பகுதிகளிலும், ஆலையடிவேம்பு காவல்துறைப் பிரிவில், ஆலடிவேம்பு 1ஆம், 3ஆம், 9ஆம் வட்டாரங்களும், தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில், கல்முறை, அக்கரைப்பற்று பிரதேசங்களில், அதிகளவில் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று நடந்த காரைதீவு பிரதேச சபைக் கூட்டத்தில் உரையாற்றிய சபைத் தவிசாளர் ஜெயசிறில், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அம்பாறை மாவட்டம் முழுவதையும் முடக்குமாறு, சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *