முக்கிய செய்திகள்

குச்சவெளி பிரதேசத்தை சிங்கள மயமாக்ககும் சதி தொடர்பில் திருகோணமலை மாவட்டச் செயலாளருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

381

தென்னைமரவாடி பனிக்கவயல் பிரதேசத்தில் பதவிசிரிபுர பிரதேசசபையினால் நிறுவப்பட்டுள்ள அத்துமீறிய வரவேற்புப் பலகையை உடனடியாக அகற்றுமாறு மாவட்டச் செயலாளருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் சிறீஞானேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த பிரதேசமானது குச்சவெளி பிரதேசசபைக்குச் சொந்தமானது என்பதை தனது அந்த வேண்டுகோள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அவர், இந்த நடவடிக்கை தென்னவன் மரபு அடி மக்களுக்குச் சொந்தமான காணிகளை அத்துமீறிக் கையகப்படுத்தும் மறைமுக நடவடிக்கையின் முதற்படியென சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த அந்தப் பெயர்ப்பலகையில் சிங்களத்தில் மட்டும் எழுதப்பட்டுள்ளது என்பதை வெளிக்காட்டியுள்ள அவர், குச்சவெளிப் பிரதேசசபைக்கு உரித்துள்ள இடத்தில் பதவிசிரிபுர பிரதேசசபைக்கான வரவேற்புப்பலகை இடப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிகழ்வானது தமிழ்த் தேசத்தில் ஒரு உள்ளுராட்சி சபைக்குரிய இடத்தில் மற்றொரு உள்ளுராட்சி சபை தனது வரவேற்புப் பலகையை நட்டுள்ள முதன்முதல் நிகழ்வாகும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *