குஜராத் மாநிலத்தில் பாரஊர்தி ஏறியதில் உயிரிழந்த 15 பேரின் குடும்பத்தினருக்கு தலா 2 இலட்சம் ரூபா நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத் அருகே, வீதியோரமாக உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது இன்று அதிகாலை பாரஊர்தி ஒன்று ஏறியதில் 15 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
உயிரிழந்த அனைவரும் ராஜஸ்தானில் இருந்து கூலிப் பிழைப்புக்காக வந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
கரும்பு ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்துக்கு வழி விடும்போதே, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பாரஊர்தி வீதியில் இருந்து விலகி தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியதாக கூறப்படுகிறது.