குடாநாட்டில் நிகழும் குற்றச் செயல்கள் குறித்து முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தலைமையில் ஆராயப்பட்டுள்ளது

366

யாழ்.குடாநாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்கள் குறித்தும், அவற்றை கட்டுப்படுத்தும் வழி வகைகள் தொடர்பிலும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும், காவல்துறையினருக்குமிடையில் சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இன்று மாலை 5.30 மணி தொடக்கம் 7 மணிவரை தைடியில் உள்ள வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள முதலமைச்சர், வாள்வெட்டு சம்பவங்கள் குறித்து மக்கள் எவரும் முறைப்பாடுகளை தருவதற்கு முன்வருவதில்லை எனவும், இந்த சம்பவங்களுக்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருக்குமோ என்று தாங்கள் சந்தேகிப்பதாக காவல்துறையினர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் குறித்தும் அவர்களுக்கிடையில் இருக்கும் தொடர்புகள் குறித்தும் காவல்துறையினர் இன்று தமக்கு தெரியப்படுத்தியதாகவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருக்கின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை போதைப் பொருள் மற்றும் மணல் கடத்தல் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ள நிலையில், அந்த முன்னேற்றங்கள் குறித்து வாரத்திற்கு ஒரு அறிக்கை தருமாறு கேட்டிருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *