முல்லைத்தீவு குருந்தூர் மலை புராதன சிவன் ஆலயப் பகுதியை ஆக்கிரமிப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்தேசியமக்கள் முன்னணியினதும் தமிழ்தேசிய கூட்டமைப்பினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றையதினம் நேரில் சென்று அந்த இடத்தை சென்று பார்வையிட்டனர்.
குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை கோவில் அமைந்துள்ள பகுதியில் தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் தொல்லியல் திணைக்களம் ஆய்வு நடவடிக்கைக்கு தயாராகிவருகின்றது.
நாளை ஆய்வுபணிகள் இடம்பெறவுள்ளன, இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அந்த பகுதிக்கு செல்லவுள்ளார்.
இவர் தொல்லியல் நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். எனினும் இங்கு விகாரையொன்று அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நடைபெறுவதாக தகவல்கள் கசிந்திருந்தன.
மக்கள் பிரதிநிதிகள் அப்பகுதிக்குச் சென்றபோது, அதிகளவில் இராணுவம் குவிக்கப்பட்டிருந்த நிலையில் நிர்மாணப்பொருட்களும் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.