குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயன்றவர்களுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் பதவி துறந்து தக்க பாடம் புகட்டியுள்ளதாக..

267

குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயன்றவர்களுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் பதவி துறந்து தக்க பாடம் புகட்டியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் அமைச்சர்களின் பதவி துறப்பு குறித்து ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நடைபெற்ற தொடர் குண்டுத் தாக்குதலுக்கு அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர் என சுட்டிக்காட்டியுள்hளர்.
அந்தவகையில் நாட்டிலுள்ள முஸ்லிம் மக்கள் அனைவரும் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
அவர்களைப்போன்று நாமும் இவ்விடயத்தில் உறுதியாக இருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
எனினும்; சம்பவத்துடன் தொடர்புபடாதவர்களை கைது செய்யக்கூடாதென முஸ்லிம் சமூகம் வலியுறுத்துவது நியாயமான விடயமாகும் என தெரிவித்துள்ளார்.
மேலும் பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளதாக சிலரினால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முஸ்லிம் அமைச்சர் மற்றும் ஆளுநர்கள் ஆகியோருக்கு எதிராக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்விடயத்தை இனவாதிகள் மற்றும் ஆட்சியை கைப்பற்ற விரும்புகின்றவர்கள் கையிலெடுத்து புதிய கலவரத்தை நாட்டில் தோற்றுவிக்க முயன்றனர் என குறிப்பிட்டுளு;ளார்.
குறித்த அவர்களின் செயற்பாட்டுக்கு பாடம் புகட்டும் விதமாகவும் நாட்டு மக்களின் நலனை கருத்திற்கொண்டும் பதவி துறந்தமை பாராட்டத்தக்கதோர் விடயமாகும்” என இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *