பா.ஜ.க.வேட்பாளர் குஷ்புவுக்கு ஆதரவு திரட்டும் முகமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.
நேற்று சென்னைக்கு வருகை தந்த அமித்ஷா, துறைமுக தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வினோஜ் செல்வத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
மேலும் தேனாம்பேட்டையில் இருந்து திறந்த வாகனத்தில் பாண்டிபஜார் நோக்கி பேரணியாக செல்லும் அமித்ஷா, கூட்டணிக் கட்சி, பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.
இவ்வாறு சென்னையில் தேர்தல் பிரசாரங்களில் கலந்து கொள்ளும் அமித்ஷா, இராமநாதபுரம் மற்றும் நெல்லையில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.