கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த 15 கோடி அமெரிக்க டொலர்களை கூகுள் நிறுவனம் ஒதுக்கவுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார்.
தடுப்பு மருந்துகள் எங்கு, எப்போது கிடைக்கின்றன என்று உலக மக்களுக்கு அறிவுறுத்த கூகுள் நிறுவனம் உதவுவதற்கு தயாராக இருப்பதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் கிராமப் பகுதிகளிலுள்ள குடிமக்களுக்கு தடுப்பு மருந்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாது அவர்களுக்கு தடுப்பு மருந்துகளை விநியோகிக்க மேலும் சில தரப்புக்களுடன் கைகோர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.