முக்கிய செய்திகள்

கூட்டமைப்பின் தலைமையில் மாற்றம் ஏற்பட்டால் மீண்டும் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கான சாத்தியம் உள்ளதாக முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்

695

தற்போதைய தலைமைகள் மாறி மாற்றுத் தலைமை உதித்தால் மீண்டும் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கான சாத்தியம் உள்ளதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் சில பின்னடைவுகளுக்கு அரசியல் ரொட்டித்துண்டுகளுக்காக அறநிலை மறந்த அவையினர் சிலரின் நடவடிக்கையே காரணம் எனவும், அவ்வாறு இருந்த போதும் தமது செயற்பாடுகள் செவ்வனே இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் 25 ஆம் திகதியுடன் வடமாகாண சபையின் முதலாவது
ஆயுட்காலம் நிறைவுக்கு வரவுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

முதலமைச்சர் பதவி முடிவுக்கு வந்ததும் தமிழ் மக்கள் பேரவையின் நடவடிக்கைகளில் கூடிய கவனம் செலுத்தவுள்ளதாகவும், கட்சிகளிலும் பார்க்க மக்களை ஒன்றிணைத்து மக்களின் தேவைகளை உலகிற்கு எடுத்துக் கூற தன்னால் முடிந்தவற்றை செய்வேன் எனவும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *