முக்கிய செய்திகள்

கூட்டமைப்பை தடைசெய்தால் வேறுகட்சியில் களமிறங்குவோம்: சீ.வீ.கே.பதிலடி

112

ஜனநாயக நாட்டில் ஒரு கட்சியை நினைத்தபடி தடைசெய்ய முடியாது, தடைசெய்தாலும் நாம் எமது கொள்கைகளை முன்னிறுத்தி வேறு கட்சியில் போட்டியிடுவோம் என்று வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர்,

“தமிழ்த் தேசியக் கட்சிகளின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்திசைவாகவே செயற்படுகின்றனர்.

சாணக்கியன், விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார் போன்றவர்கள் பொது இலக்கில் செயற்படுகின்றனர்.

கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன், சுமந்திரன், சிறிதரன், சாணக்கியன் போன்றோர் சபைகளில் ஆவேசமாக பேசுகின்றனர்.

முன்னர் அடக்கி வாசித்தவர்கள், நாட்டில் அடக்குமுறை அதிகரித்ததால் ஆவேசமடைந்துள்ளனர்.

கஜேந்திரகுமார், சாணக்கியன் போன்றோர் சரத் வீரசேகரவிற்கு எதிராக பதிலளித்த போதே கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும், புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டது.

இதற்கு பொன்சேகாவும் தனது கடும் எதிர்பை வெளியிட்டிருந்தார். கூட்டமைப்பை தடை செய்வதென்பது மேலோட்டமான பேச்சு தான் என்றும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *