முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

கேப்பாபிலவு பிரச்சினையை சில அரச சார்பற்ற நிறுவனங்கள் பூதாகாரமாக்கி வருவதாகவும், பிரச்சினைகளுக்க தீர்வு காண முனையவில்லை

465

கேப்பாபிலவு பிரச்சினையை கொழும்பை மையமாகக் கொண்ட சில அரச சார்பற்ற நிறுவனங்கள் பூதாகாரமாக்கி வருவதாகவும், பிரச்சினைகளுக்க தீர்வு காண முனையவில்லை எனவும் வட மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
சண்டே ஒப்ஷேவர் ஆங்கில வார இறுதி பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கில் சுமார் பன்னிரெண்டு இலட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்ற போதிலும் ஊடகங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களம் 56 பேரின் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கி அதனைப் பிரச்சாரம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
8600 சதுர கிலோ மீற்றர் பரப்பினைக் கொண்ட வடக்கில் 934 கிராம சேவைப் பிரிவுகள் உண்டு எனவும், 3885 கிராமங்கள் உண்டு எனவும் இந்த ஒரே கிராமம் பற்றி மட்டுமே பேசப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கேப்பாபிலவு பிரச்சினையின் பின்னணியில் தெளிவான ஓர் அரசியல் மறைகரமொன்று செயற்பட்டு வருவதாகவும் அதன் காரணமாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டில் போர் நிறைவுக்குக் கொண்டு வந்தது எனவும், கேப்பாபிலவு பிரச்சினை கடந்த 2016ம் ஆண்டிலேயே எழுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கிராமத்திற்கு இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் காணிகள் வழங்குவதற்கு இணங்கப்பட்ட போதிலும் மக்கள் அதனை நிராகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதி இராணுவ தந்திரோபாய ரீதியில் முக்கியமான ஓர் நிலை என்று இராணுவம் கூறி வருவதாகவும் அது பற்றி வாதிடுவதற்கு தாம் இராணுவப் படைவீரன் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேப்பாபிலவு மக்கள் வேறு மாற்று ஓர் யோசனைத் திட்டத்தை முன்மொழிய வேண்டியது இன்றியமையாதது எனவும் குறித்த பகுதி மிகவும் இன்றியைமயாதது என்று இராணுவம் கூறினால் அதற்கு எவராலும் சவால் விடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டு;ள்ளார்.
தீர்வுத் திட்டமொன்றை நோக்கி நகரும் போது காணி உரிமையாளர்கள் வேறும் கோரிக்கைகளை முன்வைத்து வருவதனால் தீர்வு எட்டுவதில் சிரமங்கள் நிலவி வருவதாக வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கேப்பாப்பிலவு மக்களின் எமது நிலம் எமக்கு வேண்டும் என்ற தொடர் போராட்டமான கடந்த 706 நாட்களாக நடைபெற்று வருகின்றது.
சுமார் 110 குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் 171 ஏக்கர் பாரம்பரிய நிலப்பரப்பு இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அம்மக்கள் தமது பூர்வீக நிலங்களை மீட்க தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *