முக்கிய செய்திகள்

கேரளாவில பேரிடரை எதிர்கொள்வதற்கு அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

374

கேரளாவில் நிகழ்ந்துள்ள பேரிடரை எதிர்கொள்வதற்கு அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று சனிக்கிழமை நடந்த ஊடகவியளாலர் சந்திப்பில் இவ்வாறு அழைப்பு விட்டுள்ள அவர், என்டிஆர்ஃஎப், கடலோர காவல்படை, சிஆர்பிஃஎப், பிஎஸ்ஃஎப், போர் பாதுகாப்பு படை, எஸ்.பி.ஆர்ஃஎப், வருவாய் துறை, தீயணைப்புப் படை அனைவரோடும் ஆலோசனை செய்து தற்போது மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்று மட்டும் 33 பேர் இறந்துள்ளதாகவும், 58, 506 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், இதில் பெரும்பாலோனோர் படகுகளால் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இன்று நடைபெற்ற மீட்புதவி பணிகளில் 22 உலங்குவானூர்திகள், 83 கடற்படை படகுகள், கேரளா தீயணைப்பு படையின் 59 படகுகள், தமிழ் நாடு மற்றும் ஒடிஸா மாநிலங்களின் தீயணைப்பு அணிகள், 3,200 தீயணைப்பு படையினர் உள்ளிட்ட பலர் மீட்பு பணிகளில் ஈடுபட்டதாக அவர் விபரம் வெளயிடடுளளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *