கேரளா மாநிலத்தில் மழை குறைவடைந்துள்ளதை அடுத்து மீட்புப் பணிகள் முழு வீச்சில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வீடுகளின் கூரைகளில் தங்கியிருக்கும் மக்களை இந்திய விமானப்படை உலங்குவானூர்திகள் மூலம் மீட்டு வருவதுடன், சென்றடைய முடியாத இடங்களில் உணவுப் பொருட்களும் வானில் இருந்து பொட்டலங்களாக போடப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
350க்கு மேலானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோரை இன்னும் சென்றடைய முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்னமும் மீட்புப் பணிகள் அதிகம் தேவைப்படுவதாக கூறப்படும் அதேவேளை, இந்த மீட்புதவி பணிகளுக்கு தங்களின் படகுகளை வழங்கி மீனவர்கள் பேருதவி வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து வெள்ள நிவாரண நிதி குவிந்துவருவதாகவும், தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளில்உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரண பொருட்கள் கேரளாவுக்கு வந்தவண்ணம் உள்ளது என்றும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தெலங்கானா மாநில முதல்வர் 25 கோடி நிதியை உடனடியாக கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை மழை குறைவந்ததை அடுத்து, கடந்த ஒரு வாரத்தை ஒப்பிடும்போது தற்போது போக்குவரத்து நிலைமை சற்றே மேம்பட்ட நிலையில் இருப்பதாக தெரிவிக்க்பபடுகிறது.
இன்னும் சில பகுதிகளில் வெள்ளம் காணப்பட்டாலும், இந்திய வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கையை விலக்கியுள்ளது.