மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை மகிழடித்தீவில் உள்ள நினைவுத் தூபி அருகே இடம்பெற்றுள்ளது.
1987ஆம் ஆண்டு இதே நாளில் கொக்கட்டிச்சோலையில், சிறிலங்கா படையினரால், படுகொலை செய்யப்பட்ட 86 தமிழர்களின் நினைவாக இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு சிறிலங்கா காவல்துறையினர் தடைகளை ஏற்படுத்த முற்பட்டனர்.
எனினும், நிகழ்வு அமைதியான முறையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சரவணபவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது நினைவுத்தூபியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, உயிர் நீர்த்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.