முக்கிய செய்திகள்

கொன்சர்வேட்டிவ் கட்சியின் டயான் பின்லே பதவி விலகல்

216

கனடிய நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் கொன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினராக நீண்டகாலமாக அங்கம் வகித்து வந்த டயான் பின்லே (Diane Finley) பதவியில் இருந்து விலகியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் Diane Finley தாம் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், தாம் உடனடியாக பதவியில் இருந்து    விலகிக் கொள்வதாக நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

ஒன்ராறியோ  Haldimand-Norfolk தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக Diane Finley  2004ஆம் ஆண்டில் இருந்து பதவி வகித்து வந்தார்.

முன்னாள் பிரதமர் Stephen Harper அமைச்சரவையிலும். இவர் பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *