முக்கிய செய்திகள்

கொரானா வைரஸ் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களை உலக சுகாதார நிறுவனத்திற்கு இலவசமாக வழங்க பேஸ்புக் நிறுவனம் முடிவுசெய்துள்ளது.

48

கொரானா வைரஸ் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களை உலக சுகாதார நிறுவனத்திற்கு இலவசமாக வழங்க பேஸ்புக் நிறுவனம் முடிவுசெய்துள்ளது.

பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஷக்கர்பேர்க் (Mark Zuckerberg) இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

கொரானா வைரஸ் மற்றும் அதன் பரவல் குறித்த துல்லியமான தகவல்களை பேஸ்புக் இலவசமாக விளம்பரம் செய்வது குறித்த பேச்சுவார்த்தைகள் உலக சுகாதார நிறுவனம், அமெரிக்க நோய் கட்டுப்பாடுத் தடுப்பு மையங்கள் ஆகியவற்றுடன் நடந்துவருவதாக தமது பேஸ்புக் பக்கத்தில் மார்க் ஷக்கர்பேர்க் பதிவு செய்துள்ளார்.

இந்த நிறுவனங்கள் தவிர தம்மை அணுகும் வேறு எந்த நிறுவனத்திற்கும் நபர்களுக்கும் இந்தச் சலுகை வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *