முக்கிய செய்திகள்

கொரோனாவில் இருந்து புதுச்சேரி மக்களை பாதுகாப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள்

69

கொரோனாவில் இருந்து புதுச்சேரி மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று ஆளுநர் தமிழிசை கூறினார்.

புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

இதனையொட்டி பாரதிதாசன் சிலைக்கு கவர்னர் தமிழிசை மாலை அணிவித்தார். பின்னர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகத்தை பார்வையிட்டு அவரது உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

இதன்பின் ஊடகங்களிடத்தில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன் புதுவையில் ஒக்சிஜன் வசதியுடன் தேவையான படுக்கைகள் உள்ளது. குறைந்த விலையில் முக கவசம், கிருமிநாசினி இன்று முதல் வினியோகம் செய்யப்படும்.

கொரோனா கோர தாண்டவம் ஆட தொடங்கியுள்ளதால் வார இறுதி கதவடைப்பு தொடங்குகிறோம்.

இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு இல்லை. சூழலை பொறுத்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி புதுவையின் தேவைக்கேற்ப செயல்படுகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *