கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, பாரிஸ் உள்ளிட்ட சில பகுதிகளில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.
பிரான்ஸில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது என பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.
அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிரான்சில், சில பகுதிகளில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் கடுமையாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் மற்றும் சில பிராந்தியங்களில் கட்டுப்பாடுகளை வார இறுதியில் இருந்து அதிகரிக்கவுள்ளதாக, பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி திட்டத்தின் மூலம், புதிய பெருந்தொற்று பரவலை தவிர்க்க முடியும் என்றும், நாட்டில் மீண்டும் முழு பொதுமுடக்கத்தை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்படாது என நம்புவதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.