கொரோனா உதவி என்ற போர்வையில், இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் சிறிலங்காவில் உள்ள தங்களின் சகாக்களுக்கு நிதியுதவிகளை அனுப்பக் கூடும் என்று, ரஷ்ய தூதுவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிறிலங்காவின் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவை கடந்த வாரம் அவரது அமைச்சின் சந்தித்துக் கலந்துரையாடிய போதே கொழும்புக்கான ரஷ்ய தூதுவர் யூரி மட்டேரி Yury Materiy இதனைக் கூறியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்ட நிதியை பல இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள், தீவிரவாத நடவடிக்கைக்களுக்காக, முஸ்லிம் அமைப்புகள், அறக்கட்டளைகளுக்கு, மனிதாபிமான உதவி என்ற போர்வையில், இதுபோன்ற நோக்கங்களுக்காக அனுப்புகின்றன என்றும், ரஷ்ய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த விடயத்தில் ரஷ்யாவின் உள்துறை அமைச்சு சிறிலங்காவின் பொது பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து செயற்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.