முக்கிய செய்திகள்

கொரோனா எங்கிருந்து பரவியது என்பதைக் கண்டறிய எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம் – உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர்.

510

கொரோனா எங்கிருந்து பரவியது என்பதைக் கண்டறிய எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் (Tedros Adhanom) தெரிவித்துள்ளார்.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது.

இதுவரை சுமார் 15 இலட்சம் பேரைப் பலிகொண்டுள்ள இந்த தொற்று  தொடர்பாக, உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதானோம் (Tedros Adhanom)  கருத்து வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் எந்த விலங்கு மூலம் பரவத் தொடங்கியது என்பதைக் கண்டறிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

வரும் தலைமுறைகளை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க அந்த விபரத்தை தெரிந்து கொள்வது முக்கியம்.

இந்த மர்மத்தை வேரிலிருந்து தெரிந்து கொள்ள உலக சுகாதார நிறுவனம் விரும்புகிறது.

சீனா இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது. உலக சுகாதார நிறுவனத்தின் நிலைப்பாடு தெளிவானது.

அந்த வைரஸின் தொடக்கத்தைக் கண்டறிய வேண்டும். அது எதிர்கால தலைமுறையை பாதுகாப்பதற்கு அது  உதவும்’ என்றும், அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *