முக்கிய செய்திகள்

கொரோனா தடுப்பூசிக்கு அரசியல்வாதிகள் முந்தக்கூடாது; பிரதமர் நரேந்திர மோடி

47

கொரோனா தடுப்பூசிக்கு அரசியல்வாதிகள் முந்தக்கூடாது, என இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இன்று மாலை மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர்,  “ தடுப்பூசி குறித்து பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

தடுப்பூசி குறித்த வதந்திகளை யாரும் கண்டுகொள்ள வேண்டாம்.

தடுப்பூசிக்கு அரசியல்வாதிகள் முந்தக்கூடாது. தங்களுக்கான வாய்ப்பு வரும் போது, அரசியல்வாதிகள் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *