முக்கிய செய்திகள்

கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட சிலருக்கு பக்க விளைவுகள்

54

பிரித்தானியாவின் பைசர் மற்றும் பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதையடுத்து, ஒவ்வாமை நோய் உடையவா்கள் அந்தத் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டாம் என அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட இருவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாகவும் அவா்களில் ஒருவருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

எனவே, மருந்துகள் மற்றும் உணவுப்பொருட்களை உடல் ஏற்பதில் குறைபாட்டை ஏற்படுத்தும் ஒவ்வாமை நோய் உடையவா்கள், கொரோனா தடுப்பூசியைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த நோயுடைய பெரும்பாலானவா்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.

எனினும், கொரோனா தடுப்பூசியால் அந்த நோய்த்தொற்று பரவல் தடுக்கப்படும் என்ற நன்மையோடு ஒப்பிடுகையில், ஒவ்வாமை அபாயத்தால் ஏற்பட்டுள்ள பின்னடைவு மிகச் சிறியதே எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *