இந்தியாவில் தயாராகும், கொரோனா தடுப்பூசியை பெற 25 நாடுகள் வரிசையில் நிற்பதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
“இப்போதே 15 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கியுள்ளோம்.
இதற்காக இந்தியா நாடு செய்துள்ள பணி உலக வரைபடத்தில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.
சில ஏழை நாடுகளுக்கு மானிய விலையில் தடுப்பூசி வழங்கப்படுகிறது.
சில நாடுகள் தடுப்பூசி நிறுவனங்களுக்கு இந்திய அரசு செலுத்தும் விலைக்கு இணையாக அதை பெற விரும்புகின்றன.
சில நாடுகள் இந்திய தடுப்பூசியை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் நேரடி ஒப்பந்தங்கள் செய்துள்ளன.
இதற்காக அந்த நாடுகள் வணிக ரீதியாகவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.” என்றும் அவர் கூறியுள்ளார்.