முக்கிய செய்திகள்

கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு சிறிலாங்கா ஏற்பாடு

158

கொரோனா தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்ட பின்னர், அவற்றை களஞ்சியப்படுத்தி, உரியவர்களுக்கு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

“கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தடுப்பூசிகள் வந்தடைந்த,  மறுநாளில் இருந்து அதனை வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பமாகி விடும்.

தடுப்பூசியை முதற்கட்டமாக யாருக்கு வழங்குவது , அடுத்தகட்டமாக யாருக்கு வழங்குவது போன்ற ஒழுங்குபடுத்தல்கள் செய்யப்பட்டுள்ளன.

பிரதானமாக கொழும்பில் களஞ்சியப்படுத்துவதற்கும், ஏனைய பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் போது அங்கு களஞ்சியப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசிகளை களஞ்சியப்படுத்துவதற்கு ஏதுவான இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

அவ்வாறான இடங்களுக்கு தேவையானோர் வரவழைக்கப்பட்டு அந்த இடங்களிலேயே தடுப்பூசி ஏற்றப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *