கொரோனா தடுப்பூசியை 13ஆம் நாளுக்குள் விநியோகிக்க தயாராக உள்ளதாக இந்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.
“ மாநிலங்களில் நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி விநியோக ஒத்திகையின் அடிப்படையில், தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதி அளித்த, நாளில் இருந்து 10 நாட்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வர தயாராக உள்ளோம்.
கர்னூல், மும்பை, சென்னை மற்றும் கொல்கட்டாவில் தடுப்பூசி சேமிப்பு மையங்கள் மற்றும் 37 தடுப்பூசி மையங்களில், மொத்தமாக தடுப்பூசியை சேமித்து வைத்து, விநியோகிக்க முடியும்.
சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களின் விவரங்கள் ஏற்கனவே கோவின் செயலி மூலம் சேமிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் பதிவு செய்ய வேண்டியதில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.