முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதன் பின்னர் மது அருந்த கூடாது

203

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதன் பின்னர் மது அருந்த கூடாது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம்  கருத்துவெளியிட்ட அவர்இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது “தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16 ஆம் திகதி முதல் தொடங்கப்பட உள்ளன. தமிழகத்தில் முதற்கட்டமாக வரும் 16 ஆம் திகதி 307 மையங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பூசி முதல் மருந்து போட்ட பிறகு மது அருந்த வேண்டாம். அடுத்த 26 நாள்கள் கழித்து இரண்டாவது மருந்து அளிக்கப்படும். இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் மது அருந்தக் கூடாது. மேலும். தடுப்பூசி போடுபவர்களை எந்த வகையிலும் தனிமைப்படுத்தக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *