கொரோனா தடுப்பூசி வெளிச்சந்தையில் ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசியை உருவாக்கிய, சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“அரசின் வேண்டுகோளுக்கு அமைய முதல் 100 மில்லியன் தடுப்பு மருந்துகளை மட்டும் 200 ரூபா என்ற சிறப்பு விலையில் வழங்கியுள்ளோம்.
வெளிச்சந்தையில் இந்த மருந்து ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.
ஒவ்வொரு மாதமும் 70 தொடக்கம் 80 மில்லியன் மருந்துக்கள் தயாரிக்கப்படும்.
உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் இவற்றை எப்படி அனுப்பி வைப்பது என ஆராய்ந்து வருவதாகவும், சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.