முக்கிய செய்திகள்

கொரோனா தொற்றினால் மருத்துவமனைகளில் நெருக்கடிகள்- சுகாதார பிரிவினர்

209

ஒன்ராறியோவில் கடந்த 7 நாட்களில் சராசரியாக 3 ஆயிரத்து 255 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரத்தின் நிலையுடன் ஒப்பிடுகையில் இது 31 சத வீத அதிகரிப்பைக் காட்டுகிறது.

இரண்டாவது அலையின் உச்சத்தில், ஜனவரி 8ஆம் திகதி ஏழு நாள் சராசரி, 3 ஆயிரத்து 394 ஆக இருந்தது.

அதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில், 2 ஆயிரத்து 227 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்றும், 18 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் கொரோனா தொற்றினால் மருத்துவமனைகளில் நெருக்கடிகள் ஏற்பட ஆரம்பித்துள்ளதாகவும் சுகாதார பிரிவின் தகவல்கள் கூறுகின்றன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *